தங்கத்தின் விலை இன்று சற்று குறைவு

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது.

மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது. இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது.

இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50 குறைந்து ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.4,690-க்கு விற்பனை ஆகிறது. அதேபோன்று வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.