வாரத்தின் இறுதியில் உயர்ந்த தங்கத்தின் விலை

சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலை பங்கு சந்தை, நாட்டின் பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 40,000க்கும் மேல் விற்பனையாகி வருகிறது.

தினந்தோறும் தங்கத்தின் விலை காலை, மாலை என இரு வேளைகளிலும் மாறுபட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 80 உயர்ந்துள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தை பொறுத்தவரை சுப முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நகை விலை வழக்கத்தை விட அதிகரிக்கும். எனவே அதன் படி நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இன்று தமிழகத்தில் ஒரு சவரன் ரூ. 40,608க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 10 அதிகரித்து ரூ. 5,076ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ரூ.30 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.74.00 ஆக விற்பனையாகி வருகிறது. அதே போன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.300 அதிகரித்து ரூ.74,000 ஆக உயர்ந்துள்ளது.