தொடர்ந்து 2வது நாளாக அதிகரித்த தங்கம்

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ரூ.360 உயர்ந்த நிலையில், இன்றம் அதிரடியாக ரூ.200 உயர்வு ...தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.

பங்குசந்தை ஏற்றம் இறக்கம் கண்டால், தங்கம் விலையிலும் மாற்றம் ஏற்படும். ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த வகையில் சென்னையில் நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 360 ரூபாய்ய் உயா்ந்து ஒரு சவரன் தங்கம் 44,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


இதேபோன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் உயா்ந்து 5,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து 78 ரூபாய்க்கும், 1 கிலோ 1000 ரூபாய் அதிகரித்து ரூ.78,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்றும் தொடங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 44,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 1கிராம் தங்கம் 5,585 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளி ஆயிரம் ரூபாய் அதிகரித்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.