பிரீமியம் விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்த ஹூவாமி நிறுவனம்

ஹூவாமி நிறுவனம் பிரீமியம் விலையில் செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்ச் டைட்டானியம் கொண்டு உருவான வட்ட வடிவ டையல் பிரேம் மற்றும் லெதர் ஸ்டிராப் கொண்டிருக்கிறது. இந்த வாட்ச் 30 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

மேலும், எஸ்பிஒ2 இரத்தத்தில் உள்ள காற்றின் அளவு, இதய துடிப்பு மற்றும் மன அழுத்தத்தை டிராக் செய்யும் வசதி கொண்டுள்ளது. வாட்ச் அம்சங்களை இயக்க மூன்று பட்டன்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வாட்ச் லெதர் பிரவுன் ஸ்டிராப் என ஒற்றை வேரியண்ட்டில் மட்டும் கிடைக்கிறது.

ஹூவாமி செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் அம்சங்கள் :
- 1.39 இன்ச் 454x454 AMOLED டிஸ்ப்ளே
- 5ஏடிஎம் வாட்டர் ப்ரூப் வசதி
- எஸ்பிஒ2
- இதய துடிப்பு சென்சார்
- டைட்டானியம் அலாய் பாடி
- 40 கிராம் எடை
- 340 எம்ஏஹெச் பேட்டரி
- வயர்லெஸ் மேக்னெடிக் சார்ஜர்

ஹூவாமியின் புதிய செப் இசட் ஸ்மார்ட்வாட்ச் விலை 349 டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் ரூ. 25,900 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.