ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்!

இணையத்தில் ஹூவாய் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் லீக் ஆகி இருக்கின்றன. இதில் ஒரு மாடல் மேட் எக்ஸ்2 என்றும் மற்றொரு ஹூவாய் ஸ்மார்ட்போன் CDL-AN50 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி வருகிறது.

சீன வலைதளத்தில் மேட் எக்ஸ்2 விவரங்கள் இடம்பெறவில்லை. எனினும், CDL-AN50 மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் தெரியவந்துள்ளது. மேட் எக்ஸ்2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்பதால் முந்தைய மாடலை விட சிறப்பான ஹின்ஜ் டிசைன், மேம்பட்ட ஹார்டுவேர் வழங்கப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக வெளியான தகவல்களின் படி மேட் எக்ஸ்2 ஸ்மார்ட்போன் 8.3 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் ரெசல்யூஷன், கிரின் 9000 சிப்செட், 5ஜி வசதி, Hi1105, வைபை 6, ப்ளூடூத் 5.1, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ் சார்ந்த EMUI 11, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் OLED பேனல், டூயல் கார்டு ஸ்லாட், அதிக ரெசல்யூஷன் செல்பி கேமரா, 6.5 இன்ச் டிஸ்ப்ளே, 3900 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படு இருக்கிறது