ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனுடன் வயர்லெஸ் பட்ஸ் இசட் மாடல் அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனுடன் வயர்லெஸ் பட்ஸ் இசட் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பட்ஸ் இசட் மாடல் 10 எம்எம் டைனமிக் டிரைவர், பாஸ் பூஸ்ட், டைனமிக் 3டி ஸ்டீரியோ கூடிய டால்பி அட்மோஸ் அம்சங்களை கொண்டிருக்கிறது.

இத்துடன் அனைவரின் காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ளும் வகையில் மூன்றுவித அளவுகளில் சிலிகான் டிப் வழங்கப்பட்டு உள்ளது. புதிய பட்ஸ் இசட் சார்ஜிங் கேஸ் வித்தியாச தோற்றம் கொண்டுள்ளது. இது முந்தைய ஒன்பிளஸ் பட்ஸ் கேசை விட அகலமாக காட்சியளிக்கிறது.

புதிய பட்ஸ் இசட் இயர்பட் 40 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது. இதன் சார்ஜிங் கேசில் 450 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5 வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இது ஐபி55 தர ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இதுதவிர பாஸ்ட் சார்ஜிங் வசதி, யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரத்திற்கு ஆடியோ பிளேபேக் கிடைக்கிறது. இந்தியாவில் ஒன்பிளஸ் பட்ஸ் இசட் வைட் மற்றும் கிரே என இரண்டுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3190 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நவம்பர் 2 ஆம் தேதி துவங்குகிறது.