2- ம் நாளாக சரிந்த இதன் விலை

சென்னை: தமிழகத்தில் தங்கத்தின் பயன்பாடு உயர்ந்து வரும் நிலையில் அதன் விலையானது தினந்தோறும் உச்சம் தொட்டு கொண்டு வருகிறது. வழக்கமாக சுபமுகூர்த்த தினங்களில் திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு மக்கள் அதிக அளவில் தங்க அணிகலன்களை வாங்குவர்.

அதை தொடர்ந்து விழா காலங்களிலும் தங்கத்தின் நுகர்வு அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் தங்கத்தின் விற்பனை அதிகரிப்பதால் விலையும் உயர்க்கிறது. தற்போது நிலவும் பங்குச்சந்தை நிலவரம், தங்கத்தின் மீதான அதிக அளவு முதலீடு உள்ளிட்டவைகள் காரணமாக தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் எப்போது தங்கம் விலை குறையும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்தனர். இவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகத்தில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ.40,320க்கு விற்பனையாகி வருகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ. 5 சரிந்து ரூ. 5,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இன்று எதிர்பாராத விதமாக வெள்ளியின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 20 பைசா உயர்ந்து, ரூ.73.00 ஆக விற்பனையாகி வருகிறது.