இன்றை ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: உலகம் முழுவதும் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்தபடியே இருந்து கொண்டு வருகிறது. அதாவது, நாட்டில் பங்குச்சந்தை நிலவரம் சரிவடைவதால் தான் தங்கத்தின் விலை திடீரென உயர்வதும், அதிரடியாய் குறைந்தும் வருகிறது. இதை அடுத்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே இருந்து வருகிறது.

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு உயர்ந்ததால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

தங்கம் விலையில் நேற்று பவுனுக்கு ரூ.472 குறைந்து ரூ.39 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. நேற்று ஒரு பவுன் ரூ.38 ஆயிரத்து 840-க்கு விற்றது. இதை அடுத்து இந்நிலையில் சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.38 ஆயிரத்து 792-க்கு விற்றது.

ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 849 ஆக உள்ளது. மேலும் அதைபோல வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.63 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.63.30க்கு விற்பனை .செய்யப்படுகிறது.