இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 26) சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை ... சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது அதிகரித்தும், குறைந்தும் கொண்டு வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே 4-ம் தேதி சவரனுக்கு ரூ.352 உயர்ந்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருக்கிறது.

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,576-க்கு விற்பனையாகிறது.

இதேபோன்று , வெள்ளி கிராமுக்கு 0.30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.76,200 ஆக இருக்கிறது.