ஞாயிற்றுக்கிழமையான இன்று தங்கத்தின் விலை பற்றி பார்ப்போம்


சென்னை: தங்கத்தின் விலை ஆனது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. தங்கத்தின் தேவைகள் உயர்ந்து வருவதால் இதன் விலையும் நாளடைவில் அதிக உயரத்தை தொட்டுள்ளது.

இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான இன்று வணிக சந்தை விடுமுறை நாள் என்பதால் ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹44,360 க்கும் 1 கிராம் ரூபாய் 5,545க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 24 கேரட் தூய தங்கம் 1 கிராம் ரூபாய் 48,120 க்கும், ஒரு சவரன் ரூபாய் 60 ஆயிரத்து 15க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலை ஆனது சில்லறை விற்பனையில் 1 கிலோ 80 ஆயிரத்திற்கும்,

மேலும் 1 கிராம் ரூபாய் 80 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் நேரடியாக மக்களை பாதிப்பதால் விலை நிலவரத்தை மக்கள் தினம்தோறும் கவனித்து கொண்டு வருகின்றனர்.