இன்றைய தங்கத்தின் நிலவரம் குறித்து பார்ப்போம்

சென்னை: தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வருகிறது. மேலும் தற்போது தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டு வருகிறது. எனினும் பொதுமக்களிடம் தங்கத்தின் மீதான ஆர்வம் சற்றும் குறைவதில்லை.

அதனால் தங்கத்தின் மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து இதன் விலையும் அதிகரிக்கிறது. கடந்த 2 நாட்களில் தங்கத்தின் விலை ரூ.488 உயர்ந்துள்ளது.அதாவது கடந்த ஜனவரி 1ம் தேதி அன்று ஒரு சவரன் விலை ரூ.41,040 என இருந்த நிலையில் 2ம் தேதி அன்று ரூ.160 உயர்ந்து ரூ.41,200க்கு விற்பனையானது.

இதே போன்று கடந்த 3ம் தேதி அன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.228 உயர்ந்து ரூ.41528 என அதிரடி உயர்வை கண்டது. இதனை தொடர்ந்து, இன்றைய தங்கத்தின் விலையும் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5208க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.136க்கு உயர்ந்து ரூ.41664க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.