புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் விலை இந்திய சந்தையில் அறிமுகம்

ஹூவாமி நிறுவனம் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் 1.55 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50-க்கும் அதிகமான வாட்ச் பேஸ்கள், 24 மணி நேரத்திற்கான இதய துடிப்பு மற்றும் ஆக்சிஜன் மாணிட்டரிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் 70-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கிறது. இதனை அணிந்திருப்பவரின் உடல்நலம் மற்றும் இதய ஆரோக்கம் பற்றிய விவரங்களை துல்லியமாக கணக்கிட்டு தெரிவிக்கும் வசதி கொண்டிருக்கிறது.

இத்துடன் ப்ளூடூத் 5.0, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் தளங்களுடன் இணைந்து இயங்கும் வசதி கொண்டிருக்கிறது. மேலும் ஹூவாமியின் பயோ டிராக்கர், 2 பிபிஜி சென்சார்கள், கைரோஸ்கோப் சென்சார், GPS+GLONASS, 50 மீட்டர் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு உள்ளது. இதுதவிர மியூசிக் கண்ட்ரோல், கேமரா கண்ட்ரோல் போன்ற வசதிகளும், 220 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்படுகிறது.

இந்த பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் நார்மல் மோட் பயன்பாட்டில் அதிகபட்சம் 21 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது. இந்திய சந்தையில் புதிய அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 6,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் அமேஸ்பிட் வலைதளங்களில் நடைபெறுகிறது.