ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போன் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல் ஜூலை 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் இசட் பெயரில் அறிமுகமாகிறது. புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனின் விலை இந்திய மதிப்பில் ரூ. 22,779 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2014 இல் வெளியான ஒன்பிளஸ் ஒன் இந்தியாவில் ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் விற்பனை செய்யப்பட்டது.

தற்சமயம் புதிய ஒன்பிளஸ் இசட் விலை அறிவிக்கப்படாத நிலையில், இதன் விலை ரூ. 20 ஆயிரம் பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது. எனினும், இது ஒன்பிளஸ் ஒன் போன்றே புதிய ஒன்பிளஸ் இசட் துவக்க விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் 6.55 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது.

இதுதவிர 64 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஒன்பிளஸ் இசட் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர் மற்றும் 4300 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.