இந்தியாவில் விலைவாசி அதிகரிக்க வாய்ப்பு

இந்தியா: உலக வங்கி எச்சரிக்கை ... இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி குறைத்து உள்ளது. எனவே அதன் படி மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி 6.3 சதவிகிதமாக இருக்கும் என்ற கணிப்பை உலக வங்கி வெளியீடு ...

உலக வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை தற்போது குறைந்துள்ளது. அதன் படி 2023-24ம் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும் ஜிடிபி 6.3 சதவீகிதமாக இருக்கும் என்று உலக வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் மாதம் வெளியிட்ட கணிப்பில் இந்தியாவின் ஜிடிபி 6.6 சதவிகிதமாக இருக்கும் என தெரிவித்தது. ஆனால் தற்போது வளர்ச்சி குறையும் என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து ஜிடிபி குறைவதால், பணவீக்கம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் மாதம் இந்தியாவின் பணவீக்க கணிப்பு 5.2 சதவீதமாக இருந்தது. தற்போது அந்த கணிப்பு 5.9 சதவிகிதாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 2025 நிதியாண்டில் பணவீக்கம் 4.7 சதவிகிதமாகவும், 2026 நிதியாண்டில் பணவீக்கம் 4.1 சதவிகிதமாகவும் இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.

மத்திய அரசின் தொடர் நடவடிக்கையினால் உணவு பொருட்களின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.