ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: கடந்த சில வாரங்களாக நகை விலை குறைக்கப்பட்டாலும், அடுத்த சில நாட்களே குறைக்கப்பட்ட விலையை விட இரு மடங்கு விலையேற்றம் அடைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இம்மாத தொடக்கத்திலேயே தங்கத்தின் விலையானது சவரனுக்கு 160 குறைந்து, ஒரு சவரன் ரூ.38,360-க்கும், ஒரு கிராம் ரூ.20 குறைந்து, ரூ.4,795 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், கடந்த 12ம் தேதி வழக்கத்திற்கு மாறாக தங்க விலையானது, திடீரென உயர்ந்து சவரன் ரூ.40 உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து, ரூ.38,704க்கு விற்பனை ஆனது.

மேலும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.11 குறைந்து, ரூ.4,838 க்கு விற்பனை ஆனது. நேற்றை விட இன்றும் தங்கத்தின் விலை சரிவை கண்டுள்ளது. ஆனால் இன்று காலை நிலவரப்படி,சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ரூ.38,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 குறைந்து, ரூ.4,822-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் குறைந்து, ரூ.62.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.