சாம்சங் நிறுவனத்தின் லைவ் இயர்பட்ஸ் மாடல் அறிமுகம்!

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 20 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களுடன் கேலக்ஸி பட்ஸ் லைவ் இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்து உள்ளது. புதிய பட்ஸ் லைவ் மாடல் பீன் வடிவம் கொண்டிருக்கிறது. இதில் வயர்லெஸ் சார்ஜிங், ஏஎன்சி மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய இயர்பட்ஸ் மூலம் டிப்-லெஸ் டிசைனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ் மாடலினுள் இருக்கும் பாகங்கள் கிடைமட்டமாக வைக்கப்பட்டுள்ளன. காதுகளில் கச்சிதமாக பொருந்தி கொள்ள ஏதுவாக புதிய இயர்பட்ஸ் உடன் விங் டிப்களை சாம்சங் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் மாடல் மிஸ்டிக் பிரான்ஸ், மிஸ்டிக் வைட் மற்றும் மிஸ்டிக் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 169.99 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 12715 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் லைவ் சிறப்பம்சங்கள்
- 12 எம்எம் டிரைவர்கள்
- 3 மைக்ரோபோன்கள்
- ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்
- பட்ஸ் டூகெதர் அம்சம்
- பிக்ஸ்பி வாய்ஸ் வேக்-அப்
- ப்ளூடூத் 5
- ஏஏசி, எஸ்பிசி, ஸ்கேலபிள் கோடெக் வசதி
- அக்செல்லோமீட்டர், டச், ஹால், இன்ஃப்ராரெட், க்ரிப், பிக்கப் யூனிட்
- ஆண்ட்ராய்டு 5 அல்லது 1.5 ஜிபி ரேம் கொண்ட சாதனங்கள்
- ஐபோன் 7 அல்லது அதன் பின் வெளியான ஐஒஎஸ் 10 கொண்ட சாதனங்கள்
- ஐபிஎக்ஸ்2 வாட்டர் ரெசிஸ்டண்ட்
- இயர்பட்ஸ் 60 எம்ஏஹெச் பேட்டரி
- சார்ஜிங் கேஸ் 472 எம்ஏஹெச் பேட்டரி