இந்திய சந்தையில் சோனி ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் அறிமுகம்!

சோனி இந்தியா நிறுவனம் ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய சவுண்ட்பார் டால்பி அட்மோஸ் மற்றும் டிடிஎஸ் எக்ஸ் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய 3.1 சேனல் சவுண்ட்பார் வயர்லெஸ் சப்வூபர் ஆழமான பேஸ் கொண்டிருக்கிறது. இந்த சவுண்ட்பாரை மிக எளிமையாக டிவியுடன் ப்ளூடூத், ஹெச்டிஎம்ஐ ஏஆர்சி/ஏஆர்சி உள்ளிட்ட ஆப்ஷன்கள் மூலம் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ஆப்டிமைஸ் செய்யப்பட்ட சவுண்ட் மோட்களுடன் கிடைக்கிறது.

இந்த அம்சங்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்க முடியும். புதிய சவுண்ட்பார் 400 வாட் பவர் அவுட்புட் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. மேலும் இது 7.1.2 சரவுண்ட் சவுண்ட் அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. இது தியேட்டர்களில் உள்ளது போன்ற அனுபவத்தை வழங்கும்.

சவுண்ட்பாரில் உள்ள சோனியின் டிஜிட்டல் சிக்னல் பிராசஸிங் தொழில்நுட்பம் மற்றும் வெர்டிக்கல் சவுண்ட் என்ஜின் முன்புறம் இருக்கும் மூன்று ஸ்பீக்கர்களில் இருந்து வெர்டிக்கல் ஆடியோ வழங்குகிறது. இந்தியாவில் சோனி ஹெச்டி ஜி700 சவுண்ட்பார் விலை ரூ. 39990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சோனி விற்பனை மையங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது.