மதுபானங்களை டெலிவரி செய்ய துவங்கிய ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ!

உணவு டெலிவெரி நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஜொமாட்டோ நிறுவனங்கள் தற்போது அதிரடியாக புது விற்பனையில் களம் இறங்கி உள்ளனர். ஜார்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வாடிக்கையாளர் வீட்டிற்கே டெலிவரி செய்ய துவங்கி இருக்கின்றன. மாநில அரசிடம் இருந்து முறையான அனுமதி பெற்ற பின் முதற்கட்டமாக மதுமான டெலிவரி ராஞ்சியில் துவங்கியுள்ளது.

ஸ்விக்கியில் மதுபானங்களை விற்க அந்நிறுவனம் செயலியில் வைன் ஷாப்ஸ் எனும் பிரத்யேக பிரிவை துவங்கியுள்ளது. ஜொமாட்டோ செயலியிலும் இதேபோன்ற பிரிவு சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க மதுபானங்களை வாங்குவோர் தங்களது வயது சான்று மற்றும் பயனர் சான்றை சமர்பிக்க வேண்டும் என ஸ்விக்கி தெரிவித்துள்ளது. வயது சான்றிற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மற்றும் செல்ஃபி ஒன்றும் அனுப்ப வேண்டும். டெலிவரி செய்யப்படும் போது ஒடிபி மூலம் பயனர் சரிபார்க்கப்படுவர். இத்துடன் வாடிக்கையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவு மதுபானங்களை ஆர்டர் செய்வதை தடுக்கும் என்று ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

ஸ்விக்கி போன்று ஜொமாட்டோ நிறுவனமும் மதுபானங்களை டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளது. எனினும், பயனர்களுக்கு வயது அடிப்படையில் மதுபானங்களை எவ்வாறு கண்டறியும் என்ற விவரங்களை ஜொமாட்டோ இதுவரை தெரிவிக்கவில்லை.