சமீப காலமாக ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை

சென்னை: கவலையில் நகை பிரியர்கள் .... வணிக சந்தையில் அதிக தேவைகளை கொண்டிருக்கும் தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை மாறுபாடு அடையும் போது தங்கத்தின் விலையிலும் மாற்றம் வருகிறது.

கடந்த 2 வார காலமாகவே தங்கத்தின் விலையானது 1 கிராம் ரூ.5,000 ஐ தாண்டி சென்று வருகிறது. அன்று முதல் தொடர்ந்து தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.

மக்கள் நகை விலை குறையுமா என்று காத்திருக்க தொடங்கியுள்ளனர். எனினும் , தொடர்ந்து உச்சத்தில் தான் தங்கத்தின் விலை உள்ளது.அந்தவகையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று 1 கிராம் ரூ.5056 ..

இதையடுத்து 1 சவரன் ரூ.40448 என்றும், 24 கேரட் 1 கிராம் தங்கம் ரூ.5458 என்ற விலையிலும், 1 சவரன் ரூ.43664 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி 1 கிராம் ரூ.73 க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.73,000 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.