தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவில் கடுமையாக உயர்வு

தங்கத்தின் விலை இதுவரை இல்லாத அளவில் மீண்டும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை சந்தித்து உள்ளது.

உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது.

அதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாகவே உயர்ந்து கொண்டே இருக்கிறது. தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகிறன்றன. இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தில் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 உயர்ந்து ரூ.5103-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ 40 ஆயிரத்து 824க்கு விற்பனையானது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 42 ஆயிரத்து 864 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு 60 பைசா குறைந்து 71.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது.