சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 உயர்ந்துள்ளது

சென்னை: இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம் கொரோனா. அதன் பிறகு நடைபெற்ற ரஷ்யா உக்ரைன் போர் ஆகியவற்றின் விளைவாகவும் தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது.

இந்த நிலை நீடித்து வந்த போது பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து சிறிய ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விற்பனையாகி வந்தது.இதையடுத்து இந்த நிலையில் திடீரென மீண்டும் உக்ரைன் ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ளது.

இதனால் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை உச்சத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.456 அதிகரித்துள்ளது.

தற்போது ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.38,520க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.57 உயர்ந்து ரூ.4,815க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் அதே போல இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் உயர்ந்து ரூ.67.40 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.