ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 குறைவு

சென்னை: இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு மக்கள் தங்க அணிகலன்கள் வாங்குவது வழக்கம். அதே போன்று பண்டிகை காலங்களிலும் தங்கத்தின் விற்பனை அதிக அளவு இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு வகையான சமூக அந்தஸ்தாகவும், கலாச்சார வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது.

இத்தகைய நேரத்தில் தங்கத்தின் விலை கடந்த வருடங்களில் விண்ணை முட்டும் அளவு அதிகரித்து வந்தது. இந்த விலை உயர்வுக்கு பங்கு சந்தை சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது.

கடந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து இறங்கி வந்தது. இதையடுத்து இன்றும் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,235-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,776 க்கு விற்பனையாகிறது. இதேபோன்று , ஒரு கிராம் வெள்ளி ரூ.70.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.70,000-ஆக இருக்கிறது.