சீனாவில் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் வெளியானது

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியீடு... மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் வெளியிட்டு உள்ளது. இந்த ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் ஆனது 6.53 இன்ச் 1600×720 பிக்சல் ஹெச்டி பிளஸ் 20:9 ஐபிஎஸ் எல்சிடி டாட் டிராப் ஸ்கிரீன் வசதியினைக் கொண்டுள்ளது, மேலும் இது 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் இது IMG பவர்விஆர் ஜிஇ8320 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும், மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை 4 ஜிபி LPDDR4x ரேம், 64 ஜிபி / 128 ஜிபி (eMMC 5.1) மெமரி மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ 11 போன்றவற்றினைக் கொண்டுள்ளது, கேமராவினைப் பொறுத்தவரை 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இது 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, ஸ்பிலாஷ் ப்ரூஃப், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, மைக்ரோ யுஎஸ்பி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாகவும், மேலும் 10 வாட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது. ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், சீ புளூ மற்றும் நேச்சர் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8299 என்றும் 4 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9299 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.