இன்று திடீர் விலை உயர்வினால் இதுவாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சற்று அதிர்ச்சி

சென்னை: தங்கத்தின் விலை இன்று உயர்வு .... ஆபரணத் தங்கத்தின் விலையானது தினமும் வணிக சந்தையின் நிலவரத்தை பொறுத்து காலை மற்றும் மாலை என 2 முறை நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலையினை பொறுத்து தான் தங்கத்தின் விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த வாரம் முதல் தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நவம்பர் மாத இறுதி வரை ஒரு கிராம் ரூ,5000 க்கு கீழ் இருந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலையானது டிசம்பர் மாத ஆரம்பம் முதல் 1 கிராம் ரூ.5,000 க்கு மேல் சென்றுள்ளது.

இதனை அடுத்து நேற்று 22 கேரட் தங்கம் கிராம் ரூ .5023 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்றை விட இன்று 1 கிராமிற்கு ரூ.24 அதிகரித்துள்ளது. எனவே அதன்படி, 22 கேரட் தங்கம் கிராம் ரூ.5047 க்கு விற்பனை சேதியப்படுகிறது.

மேலும் 1 சவரன் தங்கம் ரூ.192 உயர்ந்து ரூ.40376 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் 1 கிராம் ரூ.5449 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் ரூ.43592 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி 1 கிராம் ரூ.72.50 க்கும் 1 கிலோ ரூ.72,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.