இன்று தங்கத்தின் விலை அதிரடி சரிவு

சென்னை: இந்தியாவில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு மக்கள் தங்க அணிகலன்கள் வாங்குவது வழக்கம். அதே போன்று பண்டிகை காலங்களிலும் தங்கத்தின் விற்பனை அதிக அளவு இருக்கும். நம் நாட்டை பொறுத்தவரை தங்கம் என்பது ஒரு வகையான சமூக அந்தஸ்தாகவும், கலாச்சார வழக்கமாக இருந்து கொண்டு வருகிறது.

இத்தகைய நேரத்தில் தங்கத்தின் விலை கடந்த வருடங்களில் விண்ணை முட்டும் அளவு அதிகரித்து வந்தது. இந்த விலை உயர்வுக்கு பங்கு சந்தை சரிவு, உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது

சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ஒரு சவரன் ரூ.41,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,165-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோன்று சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50க்கும், ஒரு கிலோ ரூ.67,500க்கும் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.