இன்று தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது

சென்னை: தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 குறைவு .... தங்கத்தின் விலையில் அதிரடியாக இன்று காலை மாற்றம் ஏற்பட்டு உள்ளது. விலை சற்று குறைந்துள்ளதால் நகை வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.

ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை நாம் தவிர்க்க முடியாது. மாறாக விலை குறைந்து உள்ள சமயங்களில் நமது திட்டப்படி நகைகளை வாங்கிக் கொள்ள வேண்டும். எனவே இதற்காக தினசரி தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை மக்கள் கவனித்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.20 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 கேரட் தங்கம் ஒரு சரவன் ரூ.43480க்கும், ஒரு கிராம் ரூ.5435 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இதேபோன்று , 24 கேரட் தங்கம் 1சவரன் ரூ.47160க்கும், 1 கிராம் ரூ.5895க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. அதிலும் குறிப்பாக, வெள்ளியின் விலையானது ஒரு கிராம் ரூ.75.50க்கும், ஒரு கிலோ ரூ.75500 க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.