இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்த தங்கத்தின் விலை

சென்னை: செப்டம்பர் 1 ம் தேதியான இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரணத் விலையானது குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்க திட்டமிட்டு உள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஆபரணத் தங்கம் என்பது தமிழக மக்களின் வாழ்வோடு கலந்து விட்டது. அனைத்து வித சுப காரியங்களிலும் தங்கம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனால் மக்கள் அன்றாட தங்க விலை நிலவரத்தை கவனித்து கொண்டு வருகின்றனர். தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது சகஜம் தான். இதையடுத்து இன்று சவரனுக்கு ரூ. 80 குறைந்து 22 கேரட் தங்கம் 1 சவரன் ரூ.44280 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

அதனைத்தொடர்ந்து 1 கிராம் ரூ.5535 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், 24 கேரட் தங்கம் 1 சவரன் ரூ.48040 க்கும், 1 கிராம் ரூ.6005 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக, வெள்ளியின் விலையானது சில்லறை விற்பனையில் கிராமிற்கு 50 பைசா குறைந்து 1 கிராம் ரூ.80.20 க்கும் 1 கிலோ, ரூ.80200 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.