இன்று தங்கம் விலை சற்று உயர்வு

சென்னை: எந்த அணிகலன்கள் அணிந்தாலும் தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு.

தினசரி பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து ஏற்றமடைந்து வந்த தங்கத்தின் விலையால் சாமானியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாத சூழலுக்கு ஆளாகினர்.இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று அதிகாரித்துள்ளது.

அதன்படி சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ5,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.224 அதிகரித்து ஒரு சவரன் ரூ.41,880 -க்கு விற்பனையாகிறது.

அதேபோன்று வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.1 அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70.20-க்கு, விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.