இன்று அதிரடியாக சரிந்த ஆபரணத்தங்கத்தின் விலை


சென்னை: தமிழகத்தில் கடந்த மாதங்களில் தங்கத்தின் விலை சரசரவென உயர்ந்தது. இதன் விலை எப்போது குறையும் என எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று நகைபிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக தங்கத்தின் விலை சற்று சரிந்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. வரும் நாட்களில் நாட்களில் ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைகள் வர உள்ளதால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நேரத்தில் சற்று மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக நேற்று ஆபரண தங்கத்தில் உள்ள சவரனுக்கு ரூ.200 குறைந்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாக சரிந்து உள்ளது.

இதனை அடுத்து நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது. நேற்றைய நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து 1 கிராம் ரூ. 5,480 ஆகவும், சவரனுக்கு ரூ.200 குறைந்து 1 சவரன் ரூ.43,840 ஆகவும் விற்பனையானது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ. 560 குறைந்து, 43,280-க்கு விற்பனையாகிறது. 1 கிராம் தங்கம் ரூ. 70 குறைந்து , ரூ. 5,410க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 76.50க்கு விற்பனையாகிறது.