இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக அதிகரிப்பு

சென்னை : இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 600 அதிகரித்து விற்பனை ...ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்றம் தினசரி நடந்து வரும் போதிலும் எதிர்பாராத வகையில் ஒரே நாளில் அதிக அளவு விலை உயர்வு மக்களை பெரும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

அந்த வகையில் இன்று ஒரே நாளில் நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து உள்ளது. அந்த வகையில் இன்றைய நிலவரப்படி 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை 1 சவரன் ரூ.45,218 -க்கும் ஒரு கிராம் ரூ. 5, 660-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதே போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலை 1 சவரன் ரூ. 49,040 மற்றும் 1 கிராம் ரூபாய் 6013-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வெள்ளியின் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூபாய் 77.500 பைசாவிற்கும்,

மேலும் ஒரு கிலோ ரூ. 77,500 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் இன்றைய விலை ஏற்றம் பொதுமக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.