இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னை: வாரத்தின் முதல் நாளான இன்று சற்று தங்கம் விலை சரிந்துள்ளது. மேலும் கடந்த வாரம் முழுவதும் குறைந்து வந்த நிலையில் சனிக்கிழமை மட்டும் தங்கத்தின் விலை சற்று அதிகரித்தது. இதனால் இந்த வாரமும் தங்கத்தின் விலை சரிந்து கொண்டே போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே அதனால் நகைப்பிரியர்கள் இப்போது தங்கம் வாங்குவது உகந்ததாக இருக்கும். இன்றைய தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,815க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.38,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.61.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.6110க்கு விற்பனையாகிறது.

மேலும் இனி வரும் காலங்களில் தங்கத்தின் விலை பணவீக்கம், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை குறையும் போது சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.