இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னை: தற்போது டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் தங்கம் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து கொண்டு வருகிறது.

இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தங்கத்திற்கான இறக்குமதி விதியை அதிகரித்தது. இந்த இறக்குமதி விதி அதிகரித்த ஒரு வாரத்தில் மட்டும் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 1000 ரூபாய் வரை உயர்ந்து. இந்த தங்கத்தின் விலை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து தீர்மானிக்கபடுவதால் அவ்வப்போது விலையானது ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

நேற்று 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,650 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும், ஒரு சவரன் ரூ.37,200 ஆக இருந்தது. இது கடந்த நாட்களை காட்டிலும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று ஞாயிறு கிழமை வணிக சந்தைகள் விடுமுறைகள் என்பதால் விலையில் மாற்றம் இருக்காது.எனவே அதன்படி, சென்னையில் இன்று சந்தை நிலவரப்படி 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ. 37200 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல், 24 கேரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் ரூ.5052 க்கும் சவரன் ரூ.40,416 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, 1 கிராம் வெள்ளியானது ரூ.61.50 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.61,500 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.