சென்னையில் இன்றை ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னை: ஆபரணத் தங்கம் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது. இந்நிலையில் ஏற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை மிக கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். இக்காரணத்தால் உலகம் முழுவதும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது.

மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்ந்துள்ளது. மேலும் தங்கத்தின் மீதான GST வரி 3% உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வை அடுத்து தங்கம் விலை சவரனுக்கு ரூ.1000 வரை அதிகரித்தது.

இதை அடுத்து நேற்றைய தினம் தங்கத்தின் விலை சவரன் ரூ.504 உயர்ந்து ரூ.38,920 க்கும் கிராம் ரூ.4,865-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இத்தகைய நேரத்தில் நகைப்பிரியர்கள் நகைகள் வாங்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனை தொடர்ந்து இன்றைய காலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.38,760 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.4,845-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைந்து, ரூ.63.00-க்கும், ஒரு கிலோ 63,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.