இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இந்தியா: இன்றைய வர்த்தக நாளில் 59,346 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 118 புள்ளிகள் அல்லது 0.20% என குறைந்து 59,170 ஆகவும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 36.15 புள்ளிகள் அல்லது 0.21% குறைந்து 17,356 ஆகவும் வர்த்தகம் செய்யப்படுகிறது.முந்தைய வர்த்தக நாள் முடிவில் பிஎஸ்இ(BSE) சென்செக்ஸ் 59,288 ஆகவும், என்எஸ்இ(NSE) நிஃப்டி 17,392 ஆகவும் நிறைவு அடைந்தது.

இதனை அடுத்து சென்செக்ஸில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : மஹிந்திரா & மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்து உள்ளது.

ஐடிசி லிமிடெட், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ்இண்ட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, விப்ரோ லிமிடெட் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து உள்ளது.

நிஃப்டியில் லாபம் மற்றும் நஷ்டமடைந்தவர்கள் : அதானி எண்டர்பிரைசஸ், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன், பஜாஜ் ஆட்டோ, டாடா மோட்டார்ஸ், பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ் போன்ற நிறுவனங்கள் லாபம் அடைந்து உள்ளது.

மேலும் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், சிப்லா லிமிடெட், கோல் இந்தியா, ஐடிசி லிமிடெட், டாடா ஸ்டீல், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்கள் நஷ்டம் அடைந்து உள்ளது.