நாளுக்குநாள் சரிவு காணும் தக்காளி விலை

சென்னை: கோயம்பேடு காய்கறி சந்தைக்கு சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்தது ..வட மாநிலங்களில் பெய்த கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்ட அதன் விலை கடந்து சில தினங்களாக அதிகரித்து வந்தது.

இதையடுத்து தக்காளியின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் நியாய விலை கடை மற்றும் பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விலை கிலோ ₹ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனை அடுத்து இச்சூழலில் தற்போது தக்காளியின் விலை குறைய தொடங்கியுள்ளது. விளைச்சல் அதிகரித்ததன் காரணமாக தக்காளி விலை குறைந்து உள்ளதாக தரப்பில் தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில் இன்று தக்காளி கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. பெங்களூர் தக்காளியின் விலை ரூபாய் 60க்கு விற்பனையாகிறது. நேற்று கோயம்பேடு சந்தையில் கிலோ தக்காளி விலை ₹50 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று 10 ரூபாய் குறைந்துள்ளது.