சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் டி.வி., அறிமுகம்

புதிய அறிமுகம்... மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனம் எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் ஸ்மார்ட் டிவியினை 43 இன்ச் என்ற அளவில் வெளியிட்டுள்ளது.

சியோமி எம்ஐ டிவி 4ஏ ஹாரிசான் எடிஷன் 43 இன்ச் டிவியானது 43 இன்ச் 1920×1080 பிக்சல் FHD டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் 1.5GHz குவாட்கோர் அம்லாஜிக் கார்டெக்ஸ் வசதியினைக் கொண்டுள்ளது.

மேலும் பிராசஸர் வசதியினைப் பொறுத்தவரை ஏ53 பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் 750MHz மாலி-450 MP3 ஜிபியு வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை 1 ஜிபி DDR4 டூயல் சேனல் ரேம், மற்றும் 8 ஜிபி மெமரி அளவினைக் கொண்டுள்ளது.

மேலும் எம்ஐயுஐ டிவி சார்ந்த ஆண்ட்ராய்டு மற்றும் பேட்ச்வால் கொண்டதாகவும், மேலும் எம்ஐ குவிக் வேக் வசதியினையும் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைபை, ப்ளூடூத் 4.2, 3 x HDMI, AV, USB 2.0 x 2, ஈத்தர்நெட் போன்றவற்றினையும், மேலும் 2 x 10W ஸ்பீக்கர்கள், DTS-HD வசதியினையும் கொண்டுள்ளது.