ரஜினியுடன் சின்ன வயது ஜீவா இருக்கும் படம் இணையத்தில் உலா

சென்னை: நடிகர் ரஜினியுடன் சின்ன வயதில் நடிகர் ஜீவா எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் சுற்றி சுற்றி வருகிறது.

கடந்த சில மாதங்களாக நடிகர்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அதுஎப்படி என்றால் சிறுவயதில் நடிகர்கள் பிரபலங்களுடன் எடுத்த புகைப்படங்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன.

அந்த வகையில் இப்போது ஒரு நடிகரின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது, ரஜினியுடன் ஒரு சிறுவன் எடுத்திருக்கும் புகைப்படம் அது. யார் அவர் தெரியுமா. இப்போது நடிகர் என்பதை தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக களமிறங்கியுள்ள நடிகர் ஜீவா தான்.

தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியில் மகன் என்ற அடையாளத்தோடு 2003ம் ஆண்டு ஆசை ஆசையாய் என்ற படம் மூலம் அறிமுகமான ஜீவா 40 படங்களுக்கு மேல் படங்கள் நடித்துள்ளார்.

ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு கிடைத்த வெற்றி கடந்த சில வருடங்களாக கிடைப்பதில்லை. தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அவர் செயல்பட்டார் என்பதும் குறிப்பித்தக்கது.