ஓப்பன்ஹைமர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி லண்டன் திரையிடல்

லண்டன்: சிறப்பு காட்சி வெளியானது... கிறிஸ்டோஃபர் நோலன் இயக்கத்தில் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் ஓப்பன்ஹைமர் திரைப்படத்தின் சிறப்பு காட்சி லண்டன் மாநகரில் திரையிடப்பட்டது.

சிலியன் மர்பி, மேட் டாமன், புளோரன்ஸ் பக் உள்பட பல முக்கிய நடிகர், நடிகைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டின் ரகசிய உத்தரவிற்கு இணங்க உலகின் முதல் அணு குண்டை வடிவமைத்த இயற்பியல் வல்லுநர் ராபர்ட் ஓப்பன்ஹைமரை மையமாக கொண்டது இந்த படம்.

இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அடுத்த வாரம் வெளியாக உள்ள நிலையில் தற்போது லண்டனில் இந்த படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.