நடிகர் கின்னஸ் பக்ரு வெளியிட்ட வீடியோ செம வைரலாகி வருகிறது

கேரளா: நடிகர் கின்னஸ் பக்ரு வெளியிட்ட வீடியோ ரசிகர்கள் மத்தியில் செம வைரல் ஆகி வருகிறது.

மலையாளம், தமிழ் என பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் கின்னஸ் பக்ரு. 1986ல் வெளியான 'அம்பிலி அம்மாவன்' படத்தின் மூலம் தனது 10 வயது முதல் நடிக்கத் தொடங்கினார். பின்னர் பல படங்களில் நடித்து வந்த இவர் மலையாளத்தில் 2005ல் வெளியான 'அத்புத த்வீபு' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்த நிலையில், ஸ்பெஷல் ஜூரி விருதையும் வாங்கினார்.

இதையடுத்து, பல படங்களில் முன்னணி காமெடி நடிகராகவும் வலம் வரும் இவர், தமிழில், 'டிஷ்யும்', 'அற்புத தீவு', '7ம் அறிவு', 'பகீரா' உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், 2006ம் ஆண்டு இவருக்கு திருமணமான நிலையில், 14 வயதில் தீப்தா என்ற மகள் இருக்கும் நிலையில், தற்போது இவருக்கு 2வது பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கின்னஸ் பக்ரு, தனது 2ம் மகளை கையில் வைத்து இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.