வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் இளம் நடிகர்

மும்பை: வினோத நோயால் பாதித்த நடிகர்... பாலிவுட் நடிகர் வருண் தவனுக்கு வினோத நோய் ஏற்பட்டிருக்கிறது. நடிகை சமந்தா, சமீபத்தில் தன்னை தாக்கிய வினோத நோய் குறித்து தெரிவித்தார்.

மயோசிடிஸ் எனும் இந்த நோய் தாக்கினால், உடல் பலம் இழந்து நோய் எதிர்ப்பு சக்தியையும் இழப்பார்கள். இது பற்றி சமந்தா தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாலிவுட்டில் வளரும் இளம் நடிகரான வருண் தவனுக்கு வெஸ்டிபுலர் ஹைப்போஃபங்க்‌ஷன் என்ற நோய் தாக்கியிருக்கிறது.

இது பற்றி வருண் தவன் கூறும்போது, 'வெஸ்டிபுலர் ஹைப்போஃபங்க்‌ஷன் என்பது உங்கள் சமநிலை அமைப்பின் உள் காது பகுதி சரியாக வேலை செய்யாதபோது ஏற்படும் ஒரு கோளாறு ஆகும்.

வெஸ்டிபுலர் அமைப்பு உங்கள் உள் காதில் அமர்ந்து ஒருவரின் கண்கள் மற்றும் தசைகளை சமநிலையில் வைத்திருக்க வேலை செய்கிறது. அது சரியாக வேலை செய்யாதபோது, அது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஒருவர் சமநிலையில் இல்லாத சூழல் உருவாகும். மயக்கம் ஏற்படலாம்.

இதன் ஆரம்ப கட்டத்தில் நான் இருக்கிறேன். சில மாதங்களுக்கு முன்புதான் இது பற்றி தெரிந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வருகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.