பைக் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்புக்கு சென்ற நடிகர் அமிதாப்பச்சன்

மும்பை: படப்பிடிப்புக்கு காரில் சென்றால் தாமதமாகும் என்பதால் பைக் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றுள்ளார் நடிகர் அமிதாப்பச்சன்.

பல படங்களை கைவசம் வைத்துள்ளார் அமிதாப் பச்சன். அமிதாப் பச்சன் பொதுவாக படப்பிடிப்பு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் நேரத்தை கடைபிடிப்பதில் கண்டிப்பானவர்.

உதாரணமாக, சமீபத்தில் அமிதாப் பச்சன் ஒரு திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டிலிருந்து காரில் சென்றார். திடீர் போக்குவரத்து நெரிசலால், அவரது கார் மேலும் செல்ல முடியவில்லை.

இதனால் படப்பிடிப்பு தாமதமாகும் என்பதை உணர்ந்த அவர், பைக் ஓட்டுநரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அமிதாப் பச்சன், “ரைடுக்கு நன்றி நண்பா.

நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்கல்களை தவிர்த்தும், என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி” என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.