நடிகர் ஹரிஷின் டீசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை: பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... நடிகர் ஹரிஷ் கல்யாணின் டீசல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

ஷண்முகம் முத்துசாமி இயக்கத்தில் டீசல் என்ற படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். கதாநாயகியாக அதுல்யா ரவி நடிக்கிறார். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு திபு நிணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காதல் கதைகளில் மட்டுமே நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் முதல் முறையாக ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.