வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த நடிகர் ஹரிவைரவன் காலமானார்

சென்னை: வெண்ணிலா கபடிக்குழு படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சரண்யா மோகன் நடிக்க 2009ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. இதில் நடிகர் ஹரி வைரவனும் நடித்திருந்தார்.

விளையாட்டை மையமாக கொண்டு காதல், குடும்பம் போன்ற எமோஷ்னல் கலந்த படமாக தயாராகி வெளியான இப்படம் செம ஹிட் அடித்தது. இந்த படத்தின் பாடல்களும் இளைஞர்களிடம் செம வரவேற்பு பெற்றன. இந்த படத்தில் இருந்துதான் நடிகர் சூரி பரோட்டோ சூரியாகி முன்னணி காமெடி நடிகரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதல் பாக வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகி இருந்தது, அப்படமும் தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படமாக அமைந்தது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார்.

இதற்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக செய்திகள் வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர்.