தொகுப்பாளர் ஆகிறார் நடிகர் ஜீவா... விரைவில் அறிவிப்பு?

சென்னை: தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க இளம் நடிகர்களில் ஒருவர் ஜீவா. அவரின் படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஜீவா படப்பிடிப்பு தளத்தில் சக நடிகர்களுடன் மிகவும் ஜாலியாக பேசிக் கொண்டிருப்பார். ஜீவா இருந்தாலே அந்த இடம் கலகலப்பாக இருக்கும் என்று அவருடன் நடித்த பலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் முதன்முறையாக நடிகர் ஜீவா புதிய ஜாலியான இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாகக் கூறப்படுகிறது

அதன் முதல் எபிசோடில் யுவன் சங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஜீவா காபி வித் காதல், வரலாறு முக்கியம், கோல்மால் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.