நடிகர் கமலின் வேட்டையாடு விளையாடு வரும் 23ம் தேதி ரீ-ரிலீஸ்

சென்னை: வரும் 23ம் தேதி ரீ-ரிலீஸ்... கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படம் வரும் வரும் 23ம் தேதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடித்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ‘வேட்டையாடு விளையாடு’. 2006ம் ஆண்டில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சகர்கள் மத்தியிலும் மாபெரும் வெற்றி பெற்றது.

கமல்ஹாசனின் ரசிகர்கள் மத்தியிலும் இந்தப் படத்திற்கான தனி ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில், இந்தத் திரைப்படம் தற்போது மீண்டும் திரையரங்குகளில் 23ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.