நடிகர் முத்துக்குமார் வாங்கிய புதிய கார்: ரூ.30 லட்சம் என்று தகவல்

சென்னை: குக் வித் கோமாளியில் பங்கேற்ற நடிகர் முத்துக்குமார் புதிதாக ஒரு கார் வாங்கி உள்ளார். இதன் விலை ரூ.30 லட்சம் என்று தெரிய வந்துள்ளது.
சார்பட்டா பரம்பரை, பத்து தல உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் முத்துகுமார். குறிப்பாக அவர் நெகடிவ் ரோல்களில் தான் இதுவரை நடித்து மிரட்டி வருகிறார்.

இருப்பினும் அவர் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார்.

தற்போது முத்துகுமார் ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். Toyota Innova Crysta என்ற காரை மொத்த குடும்பத்துடன் சென்று அவர் வாங்கி இருக்கிறார். அந்த காரின் விலை சுமார் 30 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.