இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ரஜினியின் அடுத்தப்படத்தை ஜெய் பீம்' படத்தின் மூலம் புகழ்பெற்ற டி.ஜே.ஞானவேல் இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 'ஜெய் பீம்' படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது, இந்த படத்திற்கு கிடைத்த வெற்றியினால் ரசிகர்கள் மத்தியில் இயக்குனர் ஞானவேலுக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.

தற்போது இயக்குனர் ஞானவேல்-நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்திற்கான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது, 'ஜெய் பீம்' படத்தை போலவே இந்த படமும் மிகவும் சக்திவாய்ந்த படமாக இருக்கும். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது.

இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முஸ்லீம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது மகளும், இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்படும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.