ரஜினிகாந்த் நிராகரித்த கதையில் நடிக்க உள்ள நடிகர் சிம்பு

சென்னை: ரஜினிகாந்த் நிராகரித்த கதையை சிம்புவிடம் கூறி ஓகே செய்துள்ளார் இயக்குனர் தேசிங் பெரியசாமி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் கைவசம் தற்போது மூன்று படங்கள் உள்ளன. இதில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ள படம் தான் லால் சலாம். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

இதை தொடர்ந்து TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தான் தலைவர் 170. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினி.

இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்த நிலையில், படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரில் மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குனர் தேசிங் பெரியசாமி கதை ஒன்றை ரஜினியிடம் கூறியுள்ளார். வரலாற்று கதைக்களத்தில் இப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால், அந்த கதையை ரஜினிகாந்த் நிராகரித்து விட்டாராம். இதன்பின் அந்த கதையை சிம்புவிடம் கூறி ஓகே செய்துள்ளார் இயக்குனர் தேசிங் பெரியசாமி. ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் STR 48 திரைப்படத்தின் கதையை தான் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.