100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா

சென்னை: 100 குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடியை நடிகர் விஜய் தேவரகொண்டா வழங்கினார்.

இயக்குனர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இதையடுத்து, படத்தின் வெற்றியின் போது, நடிகர் விஜய் தேவரகொண்டா தனது சம்பாத்தியத்தில் இருந்து ஒரு கோடி ரூபாயை 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் வழங்குவதாகவும், இந்த தொகையை ஹைதராபாத்தில் நடக்கும் குஷி நிகழ்ச்சிக்கு முன் தருவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா 100 குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.