இன்று 234 தொகுதிகளிலும் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் விஜய்

234 தொகுதி நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை ..... நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இன்று பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில் சந்திக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதையடுத்து ஏற்கனவே அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அவரது சிலைக்கு மக்கள் இயக்கம் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன் பின் 234 தொகுதிகளிலும் தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை மூலம் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.


இதற்கு அடுத்ததாக அண்மையில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 3 இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் பரிசு வழங்கி விஜய் கௌரவித்தார்.

இவ்வாறு அரசியல் பயணம் நோக்கி தனது அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ளும் நடிகர் விஜய் இன்று பனையூரில் தனது அலுவலகத்தில் 234 தொகுதிகளில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளையும் கூட்டாக சந்திக்கவுள்ளார். எனவே இதில் தங்களது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசிப்பார் என்று தகவல் கூறப்படுகிறது.